16 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் செகந்திராபாத் - ராமேசுவரம் ரெயில் உற்சாக வரவேற்பு





16 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் செகந்திராபாத் - ராமேசுவரம் ரெயில் இயக்கப்பட்டன திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடியில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் மிகவும் பழமையான மீட்டர்கேஜ் பாதையாக சென்னை திருவாரூர்  - காரைக்குடி-ராமேசுவரம் வழிப்பாதை இருந்தது. இந்த வழிப்பாதையில் ராமேசுவரம், காரைக்குடி வரையில் ஜனதா, கம்பன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிப்பாதையில் நடந்த அகல ரெயில் பாதை பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

மீட்டர் கேஜ் தடமாக இருந்த இந்த பாதை தற்போது அகலரயில் பாதையாக மாற்றபட்டு, மயிலாடுதுறை-காரைக்குடி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
 செகந்திராபாத்தில் இருந்து குண்டூர் தெனாலி நெல்லூர் கூடுர் சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வேதுறை அறிவித்தது....

செகந்திராபாத் - ராமேஸ்வரம்

07695 செகந்திராபாத் ராமேஸ்வரம் வண்டி புதன்கிழமைகளில் இரவு 21.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூர் (09.30) , திருவாரூர் (15.15), திருத்துறைப்பூண்டி (15.58), அதிராம்பட்டினம் (16.34),
 பட்டுக்கோட்டை (16.50), அறந்தாங்கி 
(17.50), காரைக்குடி (19.10) வழியாக வியாழக்கிழமைகளில் இரவு 23.40 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

ராமேஸ்வரம் - செகந்திராபாத்

07696 ராமேஸ்வரம் செகந்திராபாத் வண்டி வெள்ளிக்கிழமைகளில்  காலை  08.50 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு காரைக்குடி (12.05), அறந்தாங்கி (12.29), பட்டுக்கோட்டை ,  (13.13), அதிராம்பட்டினம்  (13.29),  திருத்துறைப்பூண்டி   (14.03), திருவாரூர் (15.15), சென்னை எழும்பூர் (21.50) வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். 

இந்த வாரந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில் அறிவிப்பு பயணிகள் இடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

ரெயில்வே துறையின் அறிவிப்பின்படி நேற்று முன்தினம் இரவு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு நேற்று காலை  தாமதமாக 10.45 மணிக்கு புறப்பட்டு வந்தது  பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி  ரயில் நிலையங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.‌ 

இந்த நிகழ்ச்சியில் ரயில் சங்கத்தினர் வர்த்தக சங்கத்தினர் ரயில் ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

பின்னர் இராமேஸ்வரம் இரவு 11.40 மணியளவில் சென்றடைந்தது.
















அறந்தாங்கி ரயில் நிலையத்தில் GPM மீடியா சார்பாக நேரலை செய்யப்பட்டது



நன்றி நேரலை உதவி : முருகானந்தம் சுப்பிரமணியன் , பெருமாள் நடராஜன் ,மாதேஷ்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments