திறப்புவிழா கண்டது ரெட்டையாளம் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல்
கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ரெட்டையாளம் கிராமத்தில் பழைய பள்ளிவாசலை இடித்துவிட்டு புதிய பள்ளிவாசலை கட்டுவதற்காக கிராம மக்கள் முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இந்தநிலையில் பள்ளிவாசல் கட்டுமான பணிகள் நிறைவடைந்து பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு புதிய பள்ளிவாசலை திறந்து வைத்தார். பின்னர் சிறப்பு தொழுகை நடைபெற்றது. விழாவில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மணமேல்குடி ஒன்றிய குழுத்தலைவர் பரணி கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் சீனியார் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments