பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள்

        பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 12-வது தவணை தொகை ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே விடுவிக்கப்படும். எனவே திட்ட பயனாளிகள் பிரதம மந்திரி கிசான் திட்ட இணைய தளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து பதிவை புதுப்பிக்க வேண்டும். இதற்கு வரும் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேளாண்மை துறை சார்பில் ஆவுடையார்கோவில் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் பிரதம மந்திரியின் கிசான் விவசாயிகள் உதவி மையம் மூலம் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை உள்ளீடு முறையில் பதிவு செய்து வருகின்றனர். ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காதவர்கள் இ-சேவை மையத்தில் கைரேகை உள்ளீடு செய்து அதன் மூலம் பிரதம மந்திரியின் கிசான் பதிவை புதுப்பிக்கலாம். இதற்கு விவசாயிகள் தங்கள் சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் மற்றும் வாங்கி கணக்கு புத்தகத்துடன் சென்று பதிவை புதுப்பிக்கும் படி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments