புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டீக்கடையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் டீ மாஸ்டர் காயமடைந்தார்.


மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் திருச்சி பஸ்கள் நிறுத்துமிடம் அருகே மணி என்பவரின் டீக்கடை உள்ளது. இந்த டீக்கடையின் கான்கிரீட் சிமெண்டு பூச்சு மேற்கூரை நேற்று காலை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வரும் கோவையை சேர்ந்த சுகுமார் (வயது 50) காயமடைந்தார்.

அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார், நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். இடிந்த இடிபாடுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல ஒரு கடையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. பஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்குமேல் ஆனது. கட்டிடத்தில் பெரும்பாலான இடங்களில் கான்கிரீட் சிமெண்டு பூச்சு பெயர்ந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments