பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்




ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள் 50 பேர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஊதியம் வழங்கவில்லை என்றும், ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாத ஊதியத்தை வழங்ககோரியும், சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு தொடர் போராட்டம் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை நாளிலில் 15 பேராசிரியர்கள் கல்லூரியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த அரசு கல்லூரி இதற்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியாக செயல்பட்டது. இந்த கல்லூரி நீண்ட காலத்திற்கு முன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியர்கள் தற்காலிகமானவர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று பேராசிரியர்கள் கூறினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments