வெறும் ₹85 இல் அறந்தாங்கி - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கலாம்வண்டி எண்- 06035 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (ஞாயிற்றுக்கிழமை மட்டும்)
அறந்தாங்கி-   ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01.50 AM மணிக்கு புறப்பட்டு 

பேராவூரணி - ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02.06 AM

பட்டுக்கோட்டை  - ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02.22 AM

அதிராம்பட்டினம்   - ஞாயிற்றுக்கிழமை அதிகாலை‌ 02.40 AM

திருத்துறைப்பூண்டி சந்திப்பு  - ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.20 AM

திருவாரூர் சந்திப்பு   - ஞாயிற்றுக்கிழமை அதிகாலை‌ 04.25 AM

நாகப்பட்டினம் சந்திப்பு   - ஞாயிற்றுக்கிழமை காலை ‌05.10 AM

வேளாங்கண்ணி  - ஞாயிற்றுக்கிழமை காலை ‌05.50 AM
 
வண்டி எண்- 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்)
வேளாங்கண்ணி  - ஞாயிற்றுக்கிழமை மாலை ‌06.30 PM

நாகப்பட்டினம் சந்திப்பு   - ஞாயிற்றுக்கிழமை இரவு ‌07.10 PM

திருவாரூர் சந்திப்பு   - ஞாயிற்றுக்கிழமை இரவு 08.30 PM

திருத்துறைப்பூண்டி சந்திப்பு  - ஞாயிற்றுக்கிழமை இரவு 09.02 PM

அதிராம்பட்டினம்   - ஞாயிற்றுக்கிழமை இரவு 09.40 PM

பட்டுக்கோட்டை  - ஞாயிற்றுக்கிழமை இரவு 09.57 PM

பேராவூரணி - ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 PM

அறந்தாங்கி-   ஞாயிற்றுக்கிழமை இரவு 10.44 PM மணிக்கு சேரும் 

அறந்தாங்கி - வேளாங்கண்ணி கட்டண விவரம்
முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட் - ₹85

படுக்கை வசதி (Sleeper) டிக்கெட் -₹385

3 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹1050

2 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹1440

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒவ்வொரு சனிக்கிழமை பகல் 12.35 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30. மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.அறந்தாங்கி - வேளாங்கண்ணி இடையே உள்ள நிறுத்தங்கள் 

மேலும் இந்த  ரயில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம்,
திருத்துறைப்பூண்டி, திருவாரூர்,  நாகப்பட்டினம், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குறிப்பு

அறந்தாங்கி வழியாக செல்லும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது.. விரைவில் வாரம் இருமுறை அதன் பிறகு தினசரியாக இயங்க வாய்ப்பு உள்ளது.

மேலும் அறந்தாங்கியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01.40 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி காலை 05.50 சேரும். 

திரும்ப வேளாங்கண்ணியில் இருந்து நேரடியாக  அறந்தாங்கி வருவதற்கு அன்றைக்கு  (ஞாயிற்றுக்கிழமை) மட்டும்  ரயில் உள்ளது. அந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30‌ மணி புறப்பட்டு அறந்தாங்கிக்கு இரவு 10.44 மணிக்கு வந்து சேரும்.

இரவு 10.44 மணிக்கு அறந்தாங்கி வருவதால் அறந்தாங்கி & அறந்தாங்கி சுற்றுவட்டார மக்கள் உங்கள் ஊருக்கு பேருந்து வசதிகள் உள்ளதா அதற்கே ஏற்றாற்போல் பயணத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் & இரு மார்க்கத்திலும் ரயில் வசதி உள்ளதால் ஞாயிற்றுக்கிழமையில் வேளாங்கண்ணி நாகப்பட்டினம் நாகூர் காரைக்கால் திருநள்ளாறு தரங்கம்பாடி போன்ற பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் & கடற்கரை பகுதியில் சுற்றி பார்கலாம் 

அறந்தாங்கியில் இருந்து நாகூர் காரைக்கால் தரங்கம்பாடி திருநள்ளாறு செல்பவர்கள் நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து  மூலமாக அந்த அந்த  பகுதிக்கு செல்லலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments