மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (NMA இக்பால் தெரு) 4-வது வீதியை சேர்ந்த ரா.மு.அக்பர்...



கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (NMA இக்பால் தெரு) 4-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.ரா.மு.முகைதீன் பக்கீர் அவர்களின் மகனாரும், மர்ஹூம்.அப்துல் கரீம், மர்ஹூம்.முகம்மது மசூது, ஜபருல்லாஹ் கான், இஸ்ஸதீன் ஆகியோரின் சகோதரரும், ரசூல் கான், ரியாஸ் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ரா.மு.அக்பர் அவர்கள் இன்று இரவு 31/08/2026 திங்கட்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை 01/09/2026 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments