வாஸ்கோடகாமாவில் இருந்து நாகப்பட்டினம் வரை செல்லும் வாராந்திர ரயில் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு



 

மாடகோன், ஹூப்ளி, பனஸ்வாடி, 
கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை சேலம், ஈரோடு, கரூர் ,திருச்சி, தஞ்சை திருவாரூர் வழியாக செல்லும் வாஸ்கோடகாமாவில்  இருந்து நாகப்பட்டினம் வரை சென்ற வாராந்திர ரயில் ஆகஸ்ட் 8 முதல்  வேளாங்கண்ணிக்கு நீட்டிப்பு என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 

நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே பராமரிப்பு பணி காரணமாக நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்பட்ட  எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பராமரிப்பு பணி முடிவடைந்ததால் மீண்டும் வேளாங்கண்ணி வரை இயக்கப்படுகிறது.

ரயில் எண். 17315/17316 வாஸ்கோடகாமா நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயில் தற்போது நாகப்பட்டினம் வரை இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி. ரயில் எண். 17315 வாஸ்கோடகாமா - நாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (திங்கட்கிழமைகளில்) வாஸ்கோடகாமாவில் இருந்து ஆகஸ்ட் 08, 2022 அன்று புறப்பட்டு வேளாங்கண்ணி வரை இயக்கப்படும்.

இதேபோல், வாஸ்கோடகாமா செல்லும் ரயில் எண். 17316 வாராந்திர எக்ஸ்பிரஸ் (செவ்வாய்க்கிழமை) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 09, 2022 அன்று தனது பயணத்தைத் தொடங்கும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நீட்டிக்கப்பட்ட நிலையத்தின் நேரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:




துத்சாகர் நீர்வீழ்ச்சி

கோவா செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையில் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் துத்சாகர் நீர்வீழ்ச்சி, நாட்டின் மிக அழகான, உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.

சுமார் 1,017 அடி உயரத்தில் இருந்து செங்குத்தான மலை முகடுகளின் வழியாக நான்கு அடுக்கு களாக பாய்ந்து வரும் நீர் ஒன்றாக உருமாறும் காட்சி கண்களுக்கு விருந்து படைக்கும். இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட பருவமழை காலம்தான் சிறந்து.

பால் கடல் என வர்ணிக்கப்படும் இந்த நீர் வீழ்ச்சியின் அழகை ரசிப்பதற்கு ரெயில் பயணம் சிறந்த வழித்தட மாகும். குல்லம்-காஸ்ட்லராக் ரெயில்வே வழித்தடத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை பயணிக்கும்போது நீர்வீழ்ச்சி யின் அழகை முழுமையாக ரசித்து மகிழலாம்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments