அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயங்க இருக்கும் செகந்திராபாத் - ராமேஸ்வரம்‌ ரயில் வழித்தடத்தில் என்ன என்ன சுற்றுலா தலங்கள் முக்கிய நகரங்கள் உள்ளது வாங்க பார்ப்போம்..
செகந்திராபாத் <=> ராமேஸ்வரம் இடையே திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக வாராந்திர சிறப்பு ரயிலை வரும் ஆகஸ்ட் 24, 2022 முதல் ரயில்வே நிர்வாகம் இயக்க திட்டமிட்டுள்ளது.
ஹைதரபாத் அருகேயுள்ள செகந்திராபாத் ரயில்நிலையத்திலிருந்து புதன்கிழமை தோறும் மாலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு மறுநாள் (வியாழக்கிழமை தோறும்) காலை 9.30க்கு வந்து 9.45க்கு புறப்பட்டு செங்கல்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக  திருவாரூர் (15.15),  திருத்துறைப்பூண்டி(15.58), அதிராம்பட்டினம் (16.34), பட்டுக்கோட்டை (16.50), .அறந்தாங்கி (17.50), காரைக்குடி (19.10)  மானாமதுரை இராமநாதபுரம் 
வழியாக ராமேஸ்வரத்திற்கு இரவு 11.40க்கு சென்றடையும். 

மறுமார்க்கத்தில் வெள்ளிகிழமை தோறும் ராமேஸ்வரத்திலிருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி (12.05), அறந்தாங்கி (12.29), பட்டுக்கோட்டை (13.13), அதிராம்பட்டினம்(13.29), திருத்துறைப்பூண்டி   (14.03), திருவாரூர் (15.15),‌ மயிலாடுதுறை, சிதம்பரம் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூருக்கு இரவு 9.50க்கு சென்று அங்கிருந்து இரவு 10.10க்கு புறப்பட்டு மறுநாள் (சனிக்கிழமை) பிற்பகல் 12.50 மணிக்கு ஹைதராபாத் அருகேயுள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சென்றடையும். 

இந்த ரயில் நமது மாநில தலைநகரான சென்னை வழியாக செல்வதால் வியாழக்கிழமை சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வருவோருக்கும், வெள்ளிக்கிழமை அறந்தாங்கி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை செல்வோருக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும். 

16 வருடம் கழித்து   சென்னைக்கு நேரடி ரயிலில் செல்லும் வாய்ப்பு தற்பொழுது வாரத்தில் ஒரு நாள் கிடைத்துள்ளது. 

இந்த சிறப்பு ரயிலை நாம் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் இதை நமது ரயில் தடத்தில் நிரந்தர ரயிலாகவும், மேலும் நிறைய தினசரி புதிய ரயில்கள் நமது பகுதியில் வழியாக வர காரணமாகவும் அமையும்.

மேலும் தமிழகத்தையும் தாண்டி ஆந்திரா மாநிலத்தில் கூடூர், நெல்லூர், காவலி, ஓங்கோல், பாபட்லா,  தெனாலி, குண்டூர், சாதெனபள்ளி ஆகிய நகரங்களுக்கும், தெழுங்கானா மாநிலத்தில் மிர்யாலகுடா, நல்கொண்டா, பகிடிபள்ளி மற்றும் செகந்திராபாத் ஆகிய நகரங்களுக்கும் செல்லும். மேலும் செகந்திராபாத்  நகர் அமைந்துள்ள ஹைதரபாத் தொழில் வளர்ச்சியில் முன்னேரிய மற்றும் எண்ணற்ற சுற்றுலா தலங்களையும் கொண்டுள்ளது. நமது பகுதியில் வேலை மற்றும் சுற்றுலா ரீதியாக  ஆந்திரா மற்றும் தெழுங்கானா மாநிலத்திற்கு சொல்வோரும் இந்த நேரடி ரயிலை பயன்படுத்தி பயனடையலாம். 

ஹைதராபாத்தில் பார்க்க வேண்டிய முதல் 10 சுற்றுலா இடங்கள்: 

சார்மினார், ராமோஜி பிலிம் சிட்டி, ஹுசைன் சாகர் ஏரி, கோல்கொண்டா கோட்டை, சௌமஹல்லா அரண்மனை, சாலார் ஜங் அருங்காட்சியகம், பிர்லா அறிவியல் அருங்காட்சியகம், குதுப் ஷாஹி கல்லறைகள், NTR கார்டன்ஸ், வொண்டர்லா கேளிக்கை பூங்கா. 

மிர்யாலகுடா அருகேயுள்ள முக்கிய இடங்கள்:

நாகார்ஜுன சாகர் அணை, எத்திபோதலா நீர்வீழ்ச்சி.

குண்டூர் அருகேயுள்ள முக்கிய இடங்கள்:
 
அமராவதி (ஆந்திராவின் புதிய தலைநகரம்)  , விஜயவாடா (ஆந்திராவின் இரண்டாவது பெரிய நகரம்),  உண்டவள்ளி குகைகள்,  பவாணி தீவு, கொண்டப்பள்ளி கோட்டை,  உப்பளநாடு பறவைகள் காப்பகம், பிரகாசம் தடுப்பணை. 

சென்னை டு‌ இராமேஸ்வரம் பாதையில்

சென்னையில் உள்ள இடங்களைப் பற்றியும் சென்னையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொல்லவே தேவையில்லை அனைவரும் அறிந்ததே. 

அதுபோல திரிப்பாதிரிபூலியூர்  (கடலூர்) ரயில் நிலையம் அருகே கடற்கரை பகுதிகள் ,சிதம்பரம் ரயில் நிலையம் அருகே  பிச்சாவரம் அலையாத்தி காடுகள் ‌,திருவாரூர் ரயில் நிலையம் அருகே அருகே நாகூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி காரைக்கால் சுற்றுலா தலங்கள் , திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே மனோரா, காரைக்குடி ரயில் நிலையம் அருகே அரண்மனை வீடுகள் ‌, இராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே ஏர்வாடி கீழக்கரை போன்ற ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

ராமேஸ்வரம் அருகில் மிக முக்கிய இடங்களான பாம்பன் பாலம், தனுஸ்கோடி, அதியமான் கடற்கரை போன்ற இடங்களை பற்றியும் அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்ததே. 


அதிராம்பட்டினம் அப்துல் காதர் கூறுகையில் 

நமது பகுதியில் இருந்து நேரடி ரயில் கிடைத்திருப்பது நமக்கு கிடைத்த வரமே.  நமது மக்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தி நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும்.  இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் வாரத்தில் கூடுதல் நாட்களுக்கு இந்த ரயிலை இயங்க வைக்கலாம். மேலும்    சென்னைக்கு தினசரி ரயிலும், சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு கூடுதல்  ரயில்களும் பெற வழிவகுக்கும்.  இந்த ரயிலுக்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது. இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும்.

தொகுப்பு : அதிராம்பட்டினம் அப்துல் காதர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments