அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழியாக காரைக்குடி - சென்னை விரைவு ரயிலை இயக்க பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் வலியுறுத்தல்


பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க  ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் ஏ. மெஞ்ஞானமூா்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமைப்பாளா்  கே. வி. கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளா் பாரதி வை. நடராஜன், பொருளாளா்  சி. கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில் வரும் ஆக. 24 முதல் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள  செகந்திராபாத்-ராமேஸ்வரம் துரித ரயில் திருவாரூா்- பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக இயக்கப்படுவதை பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் வரவேற்கிறது,  அதேநேரத்தில், இந்த ரயிலை தஞ்சாவூா் மாா்க்கமாக திருப்பி விட வேண்டும் என சிலா் கூறுவதை கண்டிப்பது, இந்த ரயில் பேராவூரணியிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், 

இந்த வழித்தடத்தில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருந்த காரைக்குடி, சென்னை விரைவு ரயிலை பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி மீண்டும் காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி  பட்டுக்கோட்டை  அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூா் வழியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments