கல்வி உதவித் தொகை பெற பொதுமக்களுக்கு வழிகாட்டிய கீழக்கரை இளைஞர்கள்.....

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக கல்வி உதவி தொகை பெற வழிகாட்டுதல் முகாம் 07/08/2023 ஞாயிற்று கிழமை காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 வரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ளது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த முகாமை இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம் S. I. முஹம்மது தவ்ஹீத் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.செயலாலர் அஜ்மல் கான் முகாமை துவக்கி வைத்தார். 

இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் உறுப்பினர்கள் பேராசிரியர் பாசில் அக்ரம், செய்யது அல்தாஃப், சைபுள்ளாஹ், சுகைல் செய்திருந்தனர்.

 சிறப்பு விருந்தினராக அல் மத்ரஸத்துர் ராழியாவின் தாளாளர் அஹமது சுஹைல் கலந்து கொண்டார். 

இந்த முகாமில் 100க்கும் அதிகமான  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை விண்ணபித்து பயன்பெற்றனர்.

நன்றி : கீழக்கரை டைம்ஸ்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments