தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி...! என்ன, என்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம் பட்டியல் வெளியீடு!



ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் நாள் (1, மே), சுதந்திர தின நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகள் கிராம சபை கூட்டம் கூட்டவில்லை. 

இதனையடுத்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதன் காரணமாக சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டத்தை கூட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில்,  சுதந்திர தினமான 15.08.2022 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினமான 15.08.2022 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments