ஒக்கூரில் நடந்த கபடி போட்டியில் ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை-நான்காம் பரிசை பெற்றனர்ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளி கபாடி போட்டியில் நான்காம் இடம்பெற்று சாதனை.

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக் கல்வி துறையால் நடைபெற உள்ள பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் கபாடி போட்டிக்கும் சிறப்பாக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஒக்கூரில்  55 கிலோ எடை பிரிவினருக்கான கபாடி போட்டி நடைபெற்றது.இதில் பள்ளியின் சார்பில் பயிற்சி பெற்று வரும் சக்திவேல் தலைமையிலான கபாடி அணியினர்  கலந்து கொண்டு நான்காம் இடம் பெற்று ₹5000 ரொக்க பரிசையும் , வெற்றி கோப்பையும் பெற்றனர். 
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

பயிற்சி  அளித்த தமிழாசிரியர் குமார், பொருளியல் ஆசிரியர்  சுப்பிரமணியன் உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் ஆகியோர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments