அண்ணா பிறந்த நாளைெயாட்டி வருகிற 10-ந் தேதி சைக்கிள் போட்டி! பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு!!புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி சைக்கிள் போட்டி வருகிற 10-ந் தேதி நடைபெறவுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில் சைக்கிள் போட்டி வருகிற 10-ந் தேதி காலை 7 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மிதிவண்டி கழகத்துடன் இணைந்து நடத்தப்படவுள்ளது. 

இதில் மாணவர்கள் பிரிவில், 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரம், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரம், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரம் ஆகும்.

மாணவிகள் பிரிவில், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரம், 15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம், 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம் ஆகும்.

சைக்கிள்போட்டி தேசிய நெடுஞ்சாலை அண்டக்குளம் பிரிவு விளக்குரோடு தஞ்சாவூர்- திருச்சி பைபாஸ் சாலை- மருத்துவக்கல்லூரி சாலை அருகிலிருந்து தொடங்கப்படவுள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் இடமிருந்து வயது சான்றிதழ் பெற்று 10-ந் தேதி காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கும் தேசிய நெடுஞ்சாலை அண்டக்குளம் பிரிவு விளக்குரோடு சாலைக்கு வந்து தங்களுடைய பெயர்களை பதிவுசெய்து கொள்ளுதல் வேண்டும்.

போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த செலவில் சைக்கிள்களை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தயாரான சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிளை பயன்படுத்த கூடாது. சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிளாக இருத்தல் வேண்டும். மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயது சான்றுடன் வரவேண்டும். மேலும் விரைவு சைக்கிள் போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ அல்லது விபத்தில் விளையும் தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ பங்குபெறும் மாணவ, மாணவிகளே பொறுப்பேற்க வேண்டும் என ஒப்புதல் அளிக்க வேண்டும். போட்டிகளில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் இல்லை. போட்டியில் பங்கேற்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments