தேசிய நீர் விருதுகள் வழங்கும் போட்டி 15-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்




    மத்திய அரசின் நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிக்கும் துறை, நிலத்தடி நீரை உயர்த்தும் விதமாக மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதாரத்தை புதுப்பித்தல், நீர் பயன்பாட்டு திறனை ஊக்குவித்தல், நீரை சுழற்சி செய்து மீளப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய இனங்களில் புதிய நடைமுறைகளை பின்பற்றுதல். ேமலும் அதன் பங்காளர்களான தொண்டு நிறுவனங்கள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள், நிறுவனங்கள், தொழில் துறை அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் “தேசிய நீர் விருதுகள்” வழங்கி வருகிறது. இது தொடர்பாக வருகிற நான்காவது ‘தேசிய நீர் விருதுகள்” வழங்கும் போட்டியில் கலந்துகொள்ள தொண்டு நிறுவனங்கள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள், நிறுவனங்கள், தொழில் துறை அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் தாங்கள் பங்கேற்பதை வருகிற 15-ந் தேதிக்குள் ராஷ்ட்ரீய புரஸ்கார் இணையதளத்தில் (Rashtriya Puraskar Portal -www.awards.gov.in) பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments