தமிழகம் முழுவதும் 3 நாட்கள்ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் மாநில தலைவர் அறிவிப்பு




    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், திண்டுக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊராட்சி செயலாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தினால் மக்கள் தாமாக முன்வந்து வீடு கட்டுவார்கள். தொகை குறைவாக இருப்பதால் மக்கள் தயங்குகின்றனர். ஆனால் பயனாளிகளை அதிகரிக்கும்படி ஊராட்சி செயலாளர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதுதவிர மகாத்மாகாந்தி ஊரக வேலைஉறுதி திட்டம், ஜல்ஜீவன் திட்டம், அறிக்கை சமர்ப்பித்தல், ஆன்லைனில் வரி பதிவேற்றம் என தினமும் 20-க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அனைத்து வேலைகளும் மிக அவசரம் என்றே கூறப்படுகிறது. இதனால் இரவிலும் வேலை செய்ய வேண்டியது இருப்பதால் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல்நலம் பாதித்து கடந்த ஓராண்டில் மட்டும் 40 பேர் இறந்துள்ளனர்.

இதற்கிடையே பல ஊர்களில் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுகிறது. எனவே கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல் ஊராட்சி செயலாளர் பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இதில் மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 525 ஊராட்சி செயலாளர்கள் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments