தமிழ்நாட்டில் வடகிழக்கு மாநிலங்கள் பருவமழையின் தீவிரத்தை உணர்ந்த அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பகுதிகள் கனமழையை பெற தொடங்கின. குறிப்பாக கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலம் கடும் மழைப்பொழிவை பெற்றது. இது இயல்பு நிலைக்கு மாற இன்னும் சில நாட்கள் ஆகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
கர்நாடகத்தில் இருந்து தெற்கே கேரளாவைத் தாண்டி மாலத்தீவு வரை குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் மழையின் போக்கு மாற இருப்பதால் மேற்கு கடலோர பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். இங்கு ஒரு சூறாவளி சுழற்சிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தெற்கு ஒடிசாவை ஒட்டி, கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அவற்றின் வடக்கு, தெற்கு பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் பாதிப்பு அந்தமான் நிக்கோபார் தீவிலும் இருக்கும். மேற்கே வெப்பமண்டல பாதை, கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை போன்ற காரணங்களால் நாடு முழுவதும் 12-ந்தேதி வரை மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடமேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பரவலாக மிதமாகவும், சில இடங்களில் கனமாகவும் மழைப்பொழிவு இருக்கும். மராட்டிய மாநிலத்தில் கனமழை பெய்யும். இதைப்போல மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் என நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்திலும் 12-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட்ட இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழை, தமிழகம், கர்நாடகம் அடங்கிய தென் தீபகற்ப பகுதியிலேயே அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடகத்தில் இயல்பைவிட 71 சதவீதம் அதிகமாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 90 சதவீதம் அதிகமாகவும், தெலுங்கானாவில் 45 சதவீதம் அதிகமாகவும் பெய்து இருக்கிறது. பெங்களூரு நகர்ப்பகுதியில் மட்டும் 166 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.