கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவி நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி!கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவி நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நமது ஊரை சேர்ந்த மர்ஹூம்.R.K.R.முஜிபுர் ரகுமான் அவர்களின் புதல்வி மு.ஆப்ரின் ருக்ஷானா இந்த ஆண்டு 2022 ஜூலை மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் 720 க்கு 576 மதிப்பெண்களை பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து M.B.B.S படிப்பதற்கான தகுதியினைப் பெற்று‌ நமது ஊருக்கு பெருமையினை தேடிதந்துள்ளார். ஆரம்ப வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மீமிசல் பாப்புலர் பள்ளியில் படித்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃபிரின் ருக்ஷானாவின் மருத்துவ கனவு நிறைவுபெற  ஊர் மக்களின் சார்பாகவும், GPM Media  சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments