மல்லிப்பட்டினம் அருகே கொடூரம்: கடலில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் மிதந்த பச்சிளம் குழந்தை சடலம்!தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரையில் இன்று காலை கடலில் ஒரு சடலம் மிதந்து வந்துள்ளது. அதனை கண்ட அக்கம்பக்கத்திலுள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை தொப்புள்கொடி அறுபடாமல் சடலமாக கிடந்துள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து SDPI கட்சியின் மீனவர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.பஸ்லூன் சம்பவ இடத்திற்கு சென்று சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக SDPI கட்சியின் ஆம்புலன்ஸ் மூலமாக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்பொழுது கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, SI  சுப்ரமணி ,MEW ராஜா, ஃபீல்டு ஆஃபிசர் சியாமளா தேவி மற்றும் SDPI கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளர் H.அப்துர் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற கொடூர தாய் யார் என காவல்துறை உரிய விசாரணை செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுப்பட்டினம் கடலில் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று கடந்த 06.09.2022 அன்று தூத்துக்குடியில் கடலில் பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments