பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விழிப்புணர்வுபேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து விழிப்புணர்வு
 
        புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒவ்வொரு தாலுகாவிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று விராலிமலை தாலுகா விராலூர் மற்றும் ராஜகிரி ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் கிராம நிர்வாக அதிகாரி ஞான சகாய சந்தியா அப்பகுதியில் உள்ள 100 நாள் வேலை பணியாளர்களிடம் பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கொடுத்தார். மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து பகவான்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதேபோல் கல்குடி கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் கிராம நிர்வாக அதிகாரி கட்டிடம் மற்றும் ஊராட்சி மன்ற கட்டிடங்களில் பேரிடர் குறித்த சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments