ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தினக் கொண்டாட்டம்.!!



ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று(16-09-2022) ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு இன்றைய வழிபாட்டு கூட்டத்தில் "நான் ஓசோன் பேசுகிறேன்" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மன்ற செயலரும் முதுகலை தாவரவியல் ஆசிரியருமான செந்தில்குமார் அவர்கள் ஓசோன் உருவாகும் விதம், அதன் நன்மைகள், ஓசோன் படலத்தை பாதிக்கும் காரணிகள் மற்றும் அதை எவ்வாறு குறைப்பது பற்றி எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பள்ளி இயற்பியல் ஆசிரியர் இராஜேந்திரன் மரக்கன்றுகள் வழங்கினார். அம்மரக்கன்றுகளை பசுமைப்படை மன்றத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமையில் நடப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், நாட்டு நலப்பணித்திட்ட 
திட்ட அலுவலர் குமார், பசுமைப்படை மன்றச் செயலர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments