ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

 பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (15-09-2022) வழிபாட்டு கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்புகளை வரலாற்று முதுகலை ஆசிரியர் மதியழகன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவ மாணவிகள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments