ஆன்லைனில் மோசடி: 1 சதவீத வட்டி கடனை நம்பி ரூ.2 லட்சத்தை இழந்த மீனவர் மர்ம ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைனில் மோசடி: 1 சதவீத வட்டி கடனை நம்பி ரூ.2 லட்சத்தை இழந்த மீனவர் மர்ம ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை


1 சதவீத வட்டி கடனை நம்பி ரூ.2 லட்சத்தை மீனவர் ஒருவர் இழந்தார். ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 சதவீத வட்டியில் கடன்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் கனிக்குமார் (வயது 32). மீனவரான இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில் 1 சதவீத வட்டிக்கு ரூ.5 லட்சம் வரை கடன் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய கனிக்குமார், மர்ம ஆசாமி அனுப்பிய செல்போன் எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு தனது ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பினார்.

இந்த நிலையில் கடன் வழங்குவதற்குரிய ஆவணங்களுக்கான கட்டணம், காப்பீடு கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி கனிக்குமாரிடம் மர்ம ஆசாமி பணம் கேட்டுள்ளார்.

ரூ.2 லட்சம் மோசடி

இவரும் கடன் தொகை கிடைத்துவிடும் என நம்பி கடனுக்கு பணத்தை வாங்கி ஆன்லைன் மூலமாகவும், கூகுள் பே மூலமாகவும் மர்ம ஆசாமியின் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தினார். இவ்வாறு பல்வேறு தவணைகளாக ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 100 வரை செலுத்தியிருந்தார். ஆனால் கடன் தொகையை கேட்ட போது மர்ம ஆசாமி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனிக்குமார் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மர்ம ஆசாமியின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வைத்து விசாரித்த போது, அவை டெல்லியில் உள்ளது என தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 சதவீத வட்டி கடனை நம்பி மீனவர் ரூ.2 லட்சத்தை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments