அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளியின் கணுக்காலில் கல் துகளுடன் தையல் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆவணம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 48), தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த போது மதிவாணன் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் வலியில் துடித்து உள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி இருந்துள்ளது. இதனைதொடர்ந்து அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தையல் போட்ட பகுதியின் உள்ளே 3 கல் துகள்கள் இருந்துள்ளன. மதிவாணன் விபத்தில் சிக்கியபோது தரையில் கிடந்த கல் துகள் காலின் உள்ளே போயிருந்ததை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சுத்தம் செய்யாமல் தையல் போட்டுள்ளனர். இந்தநிலையில் மதிவாணனுக்கு தனியார் மருத்துவமனையில் ஆபரேசன் செய்து கல் துகள்களை அகற்றியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments