துபாய்க்கு சென்ற மனைவியை வரவழைக்க மகள்களை அடித்து துன்புறுத்திய வீடியோ அனுப்பிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத் தில் உள்ள பெண்டபாடு அடுத்த வீரபாளையத்தை சேர்ந்தவர்கள் தாவித்-நிர் மலா தம்பதி. இவர்களுக்கு ஆகாஷ்(13), அம்ருதா(12), அலைக்கியா(11) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் தாவித் சரியாக குடும்பம் நடத்த பணம் தராமல் குடித்து அடிக்கடி சண்டை யிட்டு வத்துள்ளார். இதனால், குடும்பத்தின் நிதி சுமையை போக்கவும் தனது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டும் ஏஜெண்ட் ஒருவர் மூலம் நிர்மலா துபாய்க்கு சென்று வேலை பார்த்து வருகிறார். இதனால், எந்தவித பணிக்கும் செல்லாமல் மனைவி அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு குடித்து கொண்டு ஊர் சுற்றி வத்துள்ளார். 

இந்நிலையில், தாவித் தனது மனைவி நிர்மலா மீது சந்தேகம் கொண்டு தனது 2 குழந்தைகளான அமிர்தா மற்றும் அலேக்யாவை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அதனைசெல்போனில் வீடியோ வாக பதிவு செய்து துபாயில் உள்ள மனைவிக்கு அனுப்பியுள்ளார். வீட்டுக்கு வரும்படியும் இல்லாவிட்டால் மகள்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அடிக்காதே என்று பிள்ளைகள் கெஞ்சினாலும் அசுர தந்தையின் கொடூர எண்ணம் மட்டும் கரைந்ததாக இல்லை. 

இந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்மலா இதுகுறித்து பஞ் சாயத்து தலைவர் சூரியக லாவிற்கு போன் செய்து தெரிவித்து வீடியோவை அனுப்பி தன் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, சூரியசுலா ஆந்திர மாநில துணை முதல்வர் சத்திய நாராயணா உதவியுடன் தாடேபள்ளி போலீசில்நேற்று முன்தினம் புகார் அளித்தார் 

போலீசார் தன்னை வருவதை அறிந்த தாவித் தனது குழந்தை களை உறவினர் வீட்டில் வீட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து. அங்கு சென்ற போலீசார் குழந்தைகளை மீட்டனர். இந்த வீடியோ வைரலாகிய நிலையில் அந்த கொடூர தந்தையை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மகளிர் அமைப்பி னர் கோரிக்கை 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments