ஜெகதாபட்டினம் மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படைபுதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவகிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் நேற்று 8 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். தமிழக எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

மேலும் படகில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்துள்ளனர்.

மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெகதாபட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments