பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா புத்தக பைகள், செருப்புகள் புதுக்கோட்டைக்கு வந்தன. இவை விரைவில் வினியோகம் செய்யப்பட உள்ளது.
பாடப்புத்தகங்கள்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அந்த வகையில், பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நாளில் அவர்கள் கையில் புத்தகம் இருக்கும்படி ஏற்கனவே பாட புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விலையில்லா பொருட்கள் ஒவ்வொன்றாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்காக விலையில்லா புத்தக பைகள் மற்றும் செருப்புகள் வினியோகிக்கப்பட உள்ளது. இதற்காக புத்தக பைகள் மற்றும் செருப்புகள் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விலையில்லா புத்தக பைகள், செருப்புகள் நேற்று வந்தன.

புத்தக பைகள்

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கான விலையில்லா புத்தக பைகள், செருப்புகள் பிரகதாம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பாடப்புத்தக பைகள் சிறியவை 9 ஆயிரத்து 965 எண்ணிக்கையிலும், பெரியவை 33 ஆயிரத்து 448 எண்ணிக்கையிலும், செருப்புகள் மாணவர்களுக்கு 13 ஆயிரத்து 810 எண்ணிக்கையிலும், மாணவிகளுக்கு 14 ஆயிரத்து 386 எண்ணிக்கையிலும் வந்துள்ளது.

இதேபோல அறந்தாங்கி, இலுப்பூர் கல்வி மாவட்டத்திற்கும் வந்துள்ளதாக கல்வி துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். இந்த புத்தக பைகள், செருப்புகள் விரைவில் மாணவ-மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments