வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆலங்குடி வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி கடலூரை சேர்ந்தவர் கைது
        வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த கடலூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் வேலை

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா ரெட்டக்குறிச்சி ஊராட்சி வேப்பூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40). புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா பள்ளத்திவிடுதி ஊராட்சி கீழக்கரும்பிரான்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பழனிவேலு (28). இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதில் வடிவேல் தனக்கு வெளிநாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். இதனால் உடனடியாக வேலை வாங்கி விடலாம் என்று பழனிவேலுவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பழனிவேலு, வடிவேல் கூறிய வங்கி கணக்கில் 4 தவணைகளாக ரூ.6 லட்சத்தை அனுப்பி உள்ளார்.

கைது

இதையடுத்து பலநாட்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து வடிவேல்விடம் கேட்டபோதும் அவர் முறையான பதில் கூறவில்லை. இதற்கு பின்பு தான் பழனிவேலு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் பழனிவேலு புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வடிவேல் இதுபோன்று பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து வடிவேலை போலீசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments