கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கீரனூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் வெவ்வயல்பட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியை மூடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கல்குவாரி செயல்படாது என்று கூறியும், குவாரி தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கீரனூர் தாலுகா அலுவலகத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சின்னத்துரை எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட, ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments