புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ந் தேதி கிராமசபை கூட்டம்
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த மற்றும் சாரா தொழில்கள் மற்றும் இதரப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன. இதில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments