முக்கண்ணாமலைப்பட்டியில் ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது; 7 ஆடுகள் பறிமுதல்! இரவு ரோந்து பணியில் போலீசார் நடவடிக்கை!!



முக்கண்ணாமலைப் பட்டியில் போலீசார் இரவு ரோந்து பணியின் போது, ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு 7 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அன்னவாசல் அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 29). விவசாயியான இவர், வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை காணவில்லை என்று ஆறுமுகம் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட ஆடுகள்
பின்னர் அவர்களை பின்தொடர்ந்த போலீசார் 3 பேரையும் புதூர் அருகே வைத்து மடிக்கி பிடித்தனர். பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருமலைக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (20), பரம்பூர் வண்ணாரப்பட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் பாலகுமார் (20), திருப்பத்தூர் கே.புதுப்பட்டியை சேர்ந்த சக்தி (21) என்பதும், இவர்கள் அப்பகுதியில் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் திருடப்பட்ட 7 ஆடுகள் மீட்கப்பட்டு பின்னர் ஆட்டின் உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ரமேஷ், பாலகுமார், சக்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments