செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தற்காலிக சில்லறை பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்... மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தகவல்!2022-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டமும், விதிகளும் (2008)- இன் கீழ், கீழ்க்கண்ட ஆவணங்களுடன் வருகிற 30-ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் அனுமதிபெற்று இயங்கி வரும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற இம்மாதம் செப்டம்பர் 30.09.2022-க்குள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மனுச் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தேவைப்படும் ஆவணங்கள், புல நீல வரைபடம் (6 நகல்கள்), சொந்த இடம் எனில் பத்திர ஆவணங்கள் (அசல் 5 நகல்கள்), வாடகை இடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திர நகல். ரூ.500/-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட E-Challan நகல். முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை). நகராட்சி/ ஊராட்சி/ பேரூராட்சி வரி ரசீது. பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம் ஆகும்.

மேலும், தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் 30.09.2022 (மாலை 5.45 மணிக்குள்) ஆகும். இத்தேதிக்குள்; கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். மேலும் 01.10.2022-க்கு பின்னர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரிவிண்ணப்பிக்க இயலாது எனவும், மேலும் உரிய காலத்திற்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரம், முன்னதாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments