கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மிதமான மழை

கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது 

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ..

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணத்தில் இன்று செப்டம்பர் 01 வியாழக்கிழமை  
விடியற்காலை முதல் 
கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்து வருகிறது நேற்றும் இரவும் மழை பெய்தது 

இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments