திருமயம் அருகே தனியார் பஸ்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதல் - 16 பேர் காயம்


திருமயம் அருகே தனியார் பஸ்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். 

திருவாரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று மதுரை நோக்கி இன்று மாலை புதுக்கோட்டை காரைக்குடி சாலை கம்மா சட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து புதுக்கோட்டைக்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பஸ்சும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறி சத்தம் போட்டு முண்டியடித்து பஸ்சிலிருந்து இறங்கினார்கள். 

இதைப் பார்த்த அந்த பகுதியில் என்ற பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் ஓடி வந்து பயணிகளை இரக்க முயற்சித்தனர். இந்த விபத்தில் தனியார் மற்றும் அரசு பஸ் ஓட்டுனர் உள்பட 16 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து நமனசமுத்திரம் போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments