வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை தனி தேர்வர்களுக்கான முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை தனி தேர்வர்களுக்கான முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்–பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 2022-ல் நடைபெற உள்ள மாநில தொழிற்பயிற்சி தேர்வு வாரியம் தனித்தேர்வர் முதல்நிலைத்தேர்வு அட்டவணைப்படி நடத்தப்படவுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்கக்குறிப்பு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் அதனை முழுமையாக படித்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். சரிவர பூர்த்தி செய்யாத மற்றும் தவறான விவரங்களடங்கிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்கடும்.

19-ந் தேதி கடைசி நாள்

இணையதளத்திலிருந்து விண்ணப்பங்கள் வருகிற 12-ந் தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 19-ந் தேதிக்குள் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments