நாட்டாணி புரசக்குடி ஊராட்சி குறிச்சிவயலில் ஆழ்துளை கிணறு பணி தொடக்க விழாஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி குறிச்சிவயல் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நாட்டாணி புரசக்குடி ஊராட்சி தலைவர் சீதாலட்சுமி தலைமை வகித்தார். 

முன்னாள். ஒன்றியக்குழுத் தலைவர் துரைமாணிக்கம், ஒன்றிய துணைத் தலைவர் பிரியா, கவுன்சிலர் சுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நகராட்சி கவுன்சிலர் கிருபாகரன், ஊராட்சி தலைவர்கள் மலர், சகுபதி, காங்.வட்டார தலைவர் முருகன், சரவணன் மற்றும்  குறிச்சிவயல், பாதிரக்குடி கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் நிர்வாகி பசீர் நன்றி கூறினார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments