கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு






கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். பங்கேற்று, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கிராம சபைக் கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்று, இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, கற்றல்,‌ கற்பித்தல்‌, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ , மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ ஆகியோருக்கு பள்ளிக்கல்வி ஆணையர்‌ சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது

பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில்‌ பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள்‌:

1. அக்டோபர்‌ 2ஆம்‌ தேதி நடைபெற இருக்கும்‌ கிராம சபை கூட்டத்தில்‌ பள்ளியின்‌ சார்பில்‌ தலைமையாசிரியர்‌. பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ தலைவர்‌, உறுப்பினர்கள்‌ கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தில்‌ பள்ளி வளர்ச்சி, கற்றல்‌ கற்பித்தல்‌ போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும்‌.

2. பள்ளியின்‌ தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ தலைவர்‌, உறுப்பினர்கள்‌ தங்கள்‌ பள்ளியின்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்‌ டத்தில்‌ பள்ளி வளர்ச்சி, கற்றல்‌ கற்பித்தல்‌ போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை முறைப்படி தொகுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

3. கீழ்க்கண்ட கருத்துக்கள்‌ தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபைக் கூட்டத்தில்‌ ஆலோசனைகளுக்காக சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

அ. இடைநிற்றல்‌
ஆ .மாணவர்‌ சேர்க்கை
இ. கற்றல்,‌ கற்பித்தல்‌
ஈ. பள்ளி உட்கட்டமைப்பு
உ. மாணவர்‌ பாதுகாப்பு

4. அக்டோபர்‌ 2ஆம்‌ தேதி நடைபெறும்‌ சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ இத்தீர்மானங்களைப்‌ பகிர்ந்து கொண்டு அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்‌.

5. கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களைப்‌ பகிர்ந்துகொள்வதன்‌ மூலம்‌ கிராம மக்கள்‌ தங்கள்‌ பள்ளி சார்ந்த பிரச்சனைகள்‌ மற்றும்‌ தேவைகளை அறிந்துகொண்டு தங்களின்‌ பங்களிப்பை அளிக்க இயலும்‌. மேலும்‌ கிராமப்‌ பஞ்சாயத்துக்கள்‌ பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பட முடியும்‌.

6. கிராம சபை கூட்டத்தில்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்கள்‌ தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை,முடிவுகளை இம்மாதம்‌ கடைசி வெள்ளிக்‌ கிழமை நடைபெறும்‌ பள்ளி மேலாண்மைக்குழுக்‌ கூட்டத்தில்‌ கலந்தாலோசிக்க வேண்டும்‌.

மேற்காணும்‌ அனைத்து வழிமுறைகளையும்‌ பின்பற்றி பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில்‌ பகிர்ந்து கொண்டு விவாதிக்க தலைமையாசிரியர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு தலைவர்‌,உறுப்பினர்களை அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ , மாவட்டத்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments