தொண்டி பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்க கருமாணிக்கம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை!!



தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர்கள் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கத்தை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் தொண்டி பேரூராட்சியில் அதிக அளவில் மக்கள் தொகை உள்ளதால் தற்போது கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் தொண்டி பேரூராட்சிக்கு என புதிதாக ஆழ்குழாய் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைத்து தர வேண்டும். மேலும் போக்குவரத்து கழக பணிமனை, அரசு மகளிர் கல்லூரி அமைக்க தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும். தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்தினர். 

அப்போது தொண்டி பேரூராட்சி நகர் காங்கிரஸ் தலைவர் காத்த ராஜா மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments