கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து, அதிக விளைச்சல் பெற்று பண்ணை வருவாயை உயர்த்த இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 11 தவணை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 12-வது தவணை தொகையைப் பெற அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நிதி பெற்று வரும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கணினி மையங்கள் அல்லது தபால் நிலையத்திற்கு சென்று தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments