கோ-கோ போட்டி: அரசர்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி! பொதுமக்கள் பாராட்டு!!மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு தகுதி பெற்ற அரசர்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையினால் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட 2022-ஆம் ஆண்டு பாரதியார் தின/குடியரசு தின குழு விளையாட்டு போட்டியில் கோ-கோ விளையாட்டுப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் (17 வயது பிரிவில்) பங்கேற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரண்டாவது முறையாக மாநில அளவிலான கோ-கோ போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு முழுமையாக உழைத்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் நாகராஜன் அவர்களை பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டுகின்றனர். விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் மாணவிகளுக்கு தரமான பயிற்சிகளை வழங்கி வெற்றி பெற முழுமையான காரணமாக விளங்கி உள்ளார்.
மேலும் இதற்க்கு அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கும் மற்றும் இருபாலர் ஆசிரியர், ஆசிரியை பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments