10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் - கடலோர காவல் படையில் வேலைஇந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Chargeman, Draughtsman, MT Fitter (Mech) மற்றும் MTS (Peon) பணியிடங்களை நிரப்ப, தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கென்று மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:

Chargeman – 02 பணியிடங்கள்

Draughtsman – 01 பணியிடம்

MTFitter (Mech) – 01 பணியிடம்

MTS (Peon) – 02 பணியிடங்கள்

பணிக்கான கல்வி தகுதி:

Chargeman – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Diploma in Mechanical or Electrical or Marine or Electronics Engineering or Production Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Draughtsman – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Diploma in Civil or Electrical or Mechanical or Marine Engineering or Naval Architecture and Ship construction முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
MTFitter (Mech) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MTS (Peon) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளராக இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

02 நவம்பர் 2022 தேதியின்படி, 18 முதல் 27 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202209160634005443703R-1.pdf என்ற தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நவம்பர் இரண்டாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments