புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் & வாக்காளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு


பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடி குறித்த மாற்றங்களுக்கு மனு கொடுக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடி மாற்றங்கள் குறித்து மனு செய்யலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி மாற்றப்படுவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுரைகளின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 05.01.2022 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன் படி ஊரக பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு புதிதாக வாக்குச்சாவடிகள் அமைக்கவும், மேலும் வாக்குசாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடி குறித்த மாற்றங்களுக்கு எதிர்வரும் 14ஆம் தேதிக்குள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடம் மனு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments