கோபாலப்பட்டிணத்தில் செப்டம்பர் 04 ஞாயிற்றுக்கிழமை இலவச கொரோனா தடுப்பூசி முகாம் 


கோபாலப்பட்டிணத்தில் செப்டம்பர் 04 ஞாயிற்றுக்கிழமை  இலவச கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கயாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சியில் மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை  காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள் (2 இடங்களில்)

கோபாலப்பட்டினம் அவுலியா நகர்  பள்ளிவாசல் அருகில் உள்ள அங்கன்வாடியில்

முதல் டோஸ், இரண்டாவது டோஸ் , பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது 

முதல் ஊசி போட்டு 84 நாட்கள் ஆனவர்கள் 2வதுஊசி போட்டுக் கொள்ளலாம். 2வது ஊசி போட்டு 6 மாதம் அல்லது 26 வாரங்கள் கழிந்தவர்கள் மட்டுமே பூஸ்டர்  ஊசி போட்டுக்கொள்ளலாம் ...

எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத  அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகாமில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைவரும் தடுப்பூசி செலுத்த வரும்பொழுது தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் வரும்போது பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறிப்பு :  2 தவணை தடுப்பூசியும் செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் முடிந்திருக்க வேண்டும். முதல் மற்றும் 2-வது தவணை எந்த தடுப்பூசி போட்டுக் கொண்டார்களோ அதே நிறுவனத்தைச் சேர்ந்த பூஸ்டர் தடுப்பூசியே செலுத்த வேண்டும். மாற்றி போடக்கூடாது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments