மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: பட்டதாரிகள் பங்கேற்க அழைப்பு!!



புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பட்டதாரிகள் நிலையிலான தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வருகிற 8-ந் தேதி கடைசி நாளாகும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி நேரடியாக தொடங்கப்படவுள்ளன. இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் அவ்வப்போது மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் decgc.pki@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பதிவு செய்து பயனடையலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments