தரவரிசையில் 4-வதாக தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மத்திய அரசு கேடயம் வழங்கி பாராட்டு




75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடும் விதமாக, மத்திய அரசின் கிராமப்புற அமைச்சகத்தினால் 99 தன்னலமற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் பிறந்த 75 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் திருமயத்தில் பிறந்த தியாகி சத்தியமூர்த்தி தியாகத்தினை போற்றவும், சுதந்திர போராட்டத்தில் அவருடைய பெரும் பங்களிப்பினை நினைவு கூரும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனவே, ‘‘ஆஜாதி சே அந்தியோதயா தக்” இயக்கம் தொடங்கப்பட்டு, மத்திய அரசின் 9 அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் 17 திட்டங்களில் 23 வளர்ச்சி குறியீடுகளின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 90 நாட்களில் பயனாளிகளுக்கு திட்டங்களின் பயன்கள் சென்றடைய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் மேற்படி 17 திட்டங்கள் குறுகிய காலத்தில் நிறைவாக செயல்படுத்தப்பட்டு அதிக பயனாளிகளுக்கு பயன்கள் சென்றடைந்ததினால் புதுக்கோட்டை மாவட்டம் 75 மாவட்டங்களின் தரவரிசையில் 4-வது மாவட்டமாக மத்திய கிராமப்புற அமைச்சகத்தினால் தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் நடந்த பாராட்டு விழாவில் பரிசுக்கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் அதிகாரிகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments