மணமேல்குடி ஒன்றியத்தில் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிப்பு
    புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சே.மணிவண்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் திரு.பெ.நடராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு எண்ணும  எழுத்தும் பயிற்சி கொடுப்பதற்காக கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கணிதப் பாடத்திற்கு தேவையான அடிப்படை கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு 
திருமதி.சிவயோகம் முன்னிலை வகித்தார். 


இதில் ஆசிரியர்கள் கண்ணன், மாலதி, மலர்விழி, பாண்டி, முனியசாமி, இராமநாதன், சித்திரைவள்ளி, ஆரோக்கியசாமி, பத்மாவதி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments