காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைெபற்ற கிராமசபை கூட்டம்!!



காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஜெயலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். பெரம்பூரில் இருந்து ஆதனகோட்டை செல்லும் சாலையை சரி செய்தல், புதுப்பட்டி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவறை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வைத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தீபா நாகராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொக்கிஷகாரன்பட்டி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், வைத்தூர் அங்கன்வாடிக்கு புது கட்டிடம் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிள்ளனூர், கொப்பம்பட்டி ஊராட்சி

கிள்ளனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி செல்வம் தொண்டைமான் தலைமையில் கூட்டம் நடந்தது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நிறைவேற்றுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓடுகம்பட்டி ஊராட்சியில் தலைவர் சாமியம்மாள் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையில் சாலை அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொப்பம்பட்டி ஊராட்சியில் தலைவர் சுசீலா மதியழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குரங்குகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துதல், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரியதம்பிஉடையான்பட்டியில் தலைவர் ஆரோக்கிய ஸ்டீபன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த ஊராட்சியில் சாலையை சீரமைத்தல், தொடக்கப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுத்தல் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தெம்மாவூர் ஊராட்சி

வத்தனாக்கோட்டையில் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. தெரு விளக்குகள், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுதல் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெம்மாவூர் ஊராட்சியில் தலைவர் டி.கே.டி. கருப்பையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த கூட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல் ஒன்றியம்

அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டங்கள் நடந்தது. கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெருங்களூர் ஊராட்சி

பெருங்களூர் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட கூத்தாச்சிப்பட்டி சித்தி விநாயகர் கோவில் அருகில் காந்தி ஜெயந்தி தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் ஒன்றியம்

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம் கீழ்க்குடி ஊராட்சியில் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

பாண்டி பத்திரம் ஊராட்சியில் தலைவர் வீரபாண்டியன் தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமரன் முன்னிலையிலும், புண்ணிய வயல் ஊராட்சியில் தலைவர் சுரேஷ் தலைமையிலும், தாழனூர் ஊராட்சியில் தலைவர் முத்துக்காமாட்சி தலைமையிலும், மீமிசல் ஊராட்சியில் தலைவர் செல்வம் தலைமையிலும், காவதுகுடி ஊராட்சியில் தலைவர் சித்ரா சோனமுத்து தலைமையிலும் நாட்டானி புரசக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி MSc,BEd., தலைமையிலும்  கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மற்ற ஊராட்சிகளில் அந்தந்த தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments