அன்னவாசலில்வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அன்னவாசலில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவனத்தில் ேவலை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் நல்லம்மாள் சத்திரம் ரோடு கோல்டன்நகர் பகுதியை சேர்ந்தவர் சாலை கலைமாமணி (வயது 34). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அவரது வீட்டில் இருந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தனது மனைவி குழந்தைகளுடன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த உறவினர் ஒருவர் சாலை கலைமாமணிக்கு செல்ேபானில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அன்னவாசலுக்கு விரைந்து வந்தார்.

7 பவுன் நகைகள் திருட்டு

பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், 535 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சாலை கலைமாமணி அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments