கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி சாஞ்சாடி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன், விவசாயி. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 28). இவர் கடந்த மாதம் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஒருவாரம் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. அதன்பின்னர் வேலை வழங்கவில்லை. இதனால் தமிழ்செல்வன் கடந்த 20 நாட்களாக வேலை எதுவும் இன்றி பசி பட்டினியோடு தவித்து வருகிறார். இவரை போலவே தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் சிலர் வேலை இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்செல்வனின் தந்தை தியாகராஜன் கூறுகையில், மதுரை மேலூரை சேர்ந்த முகவர் மூலம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தி எனது மகன் குவைத் சென்றார். ஆனால் தற்போது அங்கு வேலை இல்லாமல் பசியோடு தவித்து வருவதாக போனில் தெரிவித்து கதறி அழுதார். எனது மகனை போலவே அந்த முகவர் மூலம் சென்ற சில இளைஞர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே குவைத்தில் சிக்கி வேலையின்றி தவித்து வரும் எனது மகன் உள்ளிட்ட தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.