நெருங்கும் தீபாவளி: எரியக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டுசெல்லவேண்டாம் - ரயில்வே எச்சரிக்கை




தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ரயில்களில் எரியக்கூடிய பொருட்களை பறிமுதல் செய்வதற்கான சோதனையை ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர், பார்சல் மூலம் பட்டாசு போன்ற பொருட்களை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேஸ் சிலிண்டர்கள், பெட்ரோல் / டீசல் / மண்ணெண்ணெய், அடுப்புகள், தீப்பெட்டிகள், சிகரெட் லைட்டர்கள் மற்றும் வெடிக்கும் தீப்பெட்டிகள் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை லக்கேஜ்/பார்சலின் கீழ் முன்பதிவு செய்யவேண்டாம் என்று தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் கூறியுள்ளது.

ரயில்வேயின் சட்டங்களின்படி எரியக்கூடிய மற்றும் வெடிபொருட்கள் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் தண்டனையுடன் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது 1000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என ரயில்வே துறையின் சென்னை கூட்டம் தெரிவித்துள்ளது.
 
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ரயில் நிலையங்களில் பட்டாசுகள் அல்லது சந்தேகத்திற்குரிய பொருள்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக '139' என்ற கட்டணமில்லா ரயில்வே உதவி எண் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments